இறுதிக் கட்ட இணைய இணைப்பு

மேலும் ஒன்றிய அரசின் மூலதன முதலீட்டிற்கான மாநிலங்களுக்கான சிறப்பு உதவி திட்டத்தின் கீழ் பகுதி V (OFC) பாரத்நெட் இறுதிக் கட்ட இணைய இணைப்பு (Last Mile Connectivity) திட்டத்தை செயல்படுத்த ரூ184 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பாரத்நெட் இறுதிக் கட்ட இணைய இணைப்பு திட்டம் பாரத்நெட் வலையமைப்பிலிருந்து 50,000க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்களை இணைத்து அலைக்கற்றையினை வழங்கும் திட்டமாகும்.

இத்திட்டத்தின் கீழ்சுமார் 50,000 கி.மீ வரை கண்ணாடி இழை கம்பி வடம் மற்றும் 5,000 OLT-களை கொண்டு பாரத் நெட் இருப்புமுனையிலிருந்து (Gp/Block/PoPs) பல்வேறு அரசாங்க அலுவகங்களுக்கும் மற்றும் அலைக்கற்றையினை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது மேலும் TNSWAN வலையமைப்பில் உள்ள அரசு அலுவலகங்களும் படிப்படியாக இத்திட்டத்தின் வலையமைப்பிற்கு மாற்றப்படும்.

தமிழ்நாடு கண்ணாடிஇழை வலையமைப்பு ஆனது இணைய சேவைகள் வழங்கும் உரிமத்தைப் பெற்றுள்ளது, இதன் மூலம் அனைத்து பயனர்களுக்கும் இணைய இணைப்பு சேவையை வழங்க இயலும்.இது டிஜிட்டல் பிளவைக் குறைக்கவும், மாநிலத்தில் டிஜிட்டல் புரட்சியை செயல்படுத்த உதவும் இது குடிமக்களுக்கு வீட்டு வாசலில் சேவைகளை வழங்குவதை முக்கிய நோக்கமாக மையப்படுத்தி செயல்படுத்த உள்ளது.